தெமட்டகொட – ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட்..!!

இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட – ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த பகுதியில் டெல்டா கொவிட் திரிபுடன் ஏற்கனவே 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

டெல்டா கொவிட் திரிபானது இலங்கையில் தற்போது பரவி வரும் B 117 வைரஸ் திரிபை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது நாட்டில் கொரோனா வைரசின் டெல்டா என்ற அதிபயங்கர திரிபு சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு மூன்று முக்கியத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தகவல்படி, டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்ட இடங்களை உடனடியாக தனிமைப்படுத்தல் மற்றும் அங்கிருந்து மாதிரிகளைப் பெற்று சோதனைக்கு உட்படுத்தல் முதலாவது தீர்மானமாகும்.

டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களது முதல் தொடர்பாளர்களை தேடுதல் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தல் இரண்டாவது தீர்மானமாகும்.

மூன்றாவதாக, நாட்டின் ஏனையப் பகுதிகளில் டெல்டா திரிபுடன் யாரும் உள்ளனரா? என்பது தொடர்பில் விரைவான பரிசோதனைகள் மூலம் அறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Next Post

50 கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி கைது..!!

Sat Jun 19 , 2021
Post Views: 272 50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர், ஹிக்கடுவை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சீருடையில் இருக்கும் போதே ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது […]

Today Political Cartoons of Sri Lanka