கனடாவில் கோர விபத்து – யாழ்.தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!!

கனடாவில் நடந்த விபத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கனடா, ஸ்கார்பாரோ, கிங்ஸ்டன் மற்றும் போர்ட் யூனியன் வீதிக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 23 வயதுடைய அஸ்வின் சந்திரராஜ் என்ற தெல்லிப்பளையை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றும் TTC பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் மோட்டார் வாகனத்தை ஓட்டி சென்ற தமிழ் இளைஞனே உயிரிழந்துள்ளார். TTC பேருந்து சாரதியான 61 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்த இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் ஒருவரும் பயணிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பல மணி நேரங்கள் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து..!!!

Thu Jul 8 , 2021
Post Views: 785 யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Today Political Cartoons of Sri Lanka