முடக்கப்பட்ட யாழ் நகர்ப்பகுதியில் தடைமீறும் செயல் குறித்து பொதுமக்கள் விசனம்..!!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கடந்த நாட்கள் முடக்கப்பட்ட யாழ் நகரப் பகுதியான குருநகர், பாசையூர் பகுதிகள் அறிவிக்கப்பட்டது.

இப் பகுதிகளுள் உட் செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி அற்ற நிலையில் சில இளைஞர்களும் முதியவர்களும் மாறி மாறி வெளித் திரிவதனை காணமுடிந்ததாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் வெளிச்செல்லும் இப் பகுதியைச் சேர்ந்த மக்களால் சுகாதார பாதுகாப்பற்ற நிலையில் கொரோணா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அயலில் வசிக்கும் மக்கள் மற்றும் வீதிவழியே அவதானித்த மக்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவித்தனர்.

மடத்தடி தண்ணீர்த் தாங்கி பிரதேசத்தில் காவலர்களை நியமித்த நிலையில் குருநகர் ஓடக்கரை வீதியில் காவலர்கள் இன்றி வீதித் தடை மட்டுமே போடப்பட்டிருப்பதனால் இவ்வாறான பொறுப்பற்ற நிலையில் மக்கள் நடமாடுவதாக ஏனையோரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post

நாளை யாழ்ப்பாணம் வருகிறார் நாமல் - வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா???

Sat Jun 26 , 2021
Post Views: 758 விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ஷ சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். அவை வருமாறு, யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை நாளை 27 ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட […]

Today Political Cartoons of Sri Lanka