சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புகழாரம்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும். சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும்.

அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.

சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீன நாடு பல் சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.

Next Post

கொரோனாவுக்கு அன்பு மகனைப் பறிகொடுத்த பிரபல நடிகை கவிதா - தீவிர சிகிச்சையில் கணவர்!!!

Wed Jun 16 , 2021
Post Views: 370 கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங், அரசியல் பணிகளுக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் நடிகை கவிதா. ‘நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ சீரியல்களில் நடித்தவருபவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகையான கவிதா தன் மகன் சாய் ரூப்பை கொரொனா தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளார். தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் […]

Today Political Cartoons of Sri Lanka