நாளை யாழ்ப்பாணம் வருகிறார் நாமல் – வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா???

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ஷ சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

அவை வருமாறு,

யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை நாளை 27 ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தையும் திறந்துவைக்கவுள்ளார். பின்னர் தெல்லிப்பழை தையிட்டியில் நீர் விநியோக திட்டத்தை திறந்து வைக்கவுள்ளார்.

மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் விஜயம் செய்யவுள்ளார். மாலை 4.25 மணியளவில் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இருப்பினும் தற்போது மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வருகை இடம்பெறவுள்ளதுடன், கடந்த முறை அவர் வருகை தந்த போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Next Post

யாழ் போதனா வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி..!!

Sat Jun 26 , 2021
Post Views: 961 யாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. அதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த காரைநகரை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், மன்னாரை சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இருவருடைய சடலங்களும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka