நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்!!!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் இன்று இடம்பெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

உலகளவில் பரவியுள்ள கொவிட் நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதம் முழுமையாக திறக்க முடியும். நாட்டைத் திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் சூரியன் எவ்.எம் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் கொவிட் நோய் தொடர்பான பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்கமுடியுமானதாக இருக்கும் எனத் தெரிவித்தார். இதன்போது நாட்டின் கொவிட் பரவலின் தற்போதைய போக்கு தொடர்பில் விளக்கமளித்ததுடன், மேலும் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

Next Post

கோண்டாவிலில் கடன் காசு கேட்டுச் சென்றவர் மீது தாக்குதல்..!!!

Tue Jul 6 , 2021
Post Views: 591 கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் […]

Today Political Cartoons of Sri Lanka