யாழின் முக்கிய பகுதி முடக்கம் ; பணியாளர்கள் தனிமைப்படுத்தலில் – அலுவலகம் மூடப்பட்டுள்ளது….

யாழ்.வலிமேற்கு பிரதேசசபை தலமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவகம் மூடப்பட்டுள்ளது.

தவிசாளர் மற்றும் செயலாளர், உத்தியோகத்தர்கள் என 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு பணியாற்றும் ஒரு உத்தியோகத்தருக்கு கடந்த 2 ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு அலுவலகம் மூடப்பட்டு 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஒருவருக்கு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனைய தவிசாளர், செயலாளர் உட்பட 23 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

இதேவேளை, அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன.

Next Post

சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புகழாரம்...

Wed Jun 16 , 2021
Post Views: 690 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு […]

Today Political Cartoons of Sri Lanka