பயணத்தடையை ஜீலை 2ம் திகதிவரை அமுல்ப்படுத்த சுகாதாரத்துறை அரசிடம் கோரிக்கை.

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணத்தடையை எதிர்வரும் ஜீலை மாதம் 2ம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரதுறையின் உயர்மட்டம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த கோரிக்கையை அரசாங்கம் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்திருக்கின்றது. முதல் நாளை 14ம் திகதி அதிகாலையில் பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் சுகாதாரதுறையின் மிக கடுமையான அழுத்தத்தின் மத்தியில் 21ம் திகதிவரை நீடிக்கும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்திருந்தது.

இந்த நிலையில் வார இறுதியில் பொஷன் நிகழ்வும் வரவுள்ளதால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கலாம் என கருதும் சுகாதார பிரிவினர்
பயணத் தடையை ஜீலை 2ம் திகதிவரை நீடிக்குமாறு கோரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். இந்த கோரிக்கையை தீவிரமாக அரசு பரிசீலனை செய்துள்ளபோதும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய விளைவுகள் குறித்து சிந்திக்கும் அரசு கட்டுப்பாடுகளுடன் பயணத்தடையை தளர்த்தலாமா? என்பதையும் ஆராய்கிறது.

எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 21ம் திகதியுடன் பயணத்தடையை நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Next Post

கொக்குவிலில் பதற்றம் மீன் வியாபாரிகள் கைது! (காணொளி இணைப்பு)

Sun Jun 13 , 2021
Post Views: 316 நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் மீன் வியாபாரம் செய்த ஆறு மீன் வியாபாரிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய கொவிட் தொற்றின் காரணமாக பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்ட காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளனர். இந் நிலையில் தேவையற்ற வகையில் வியாபாரம் செய்வதனால் மக்கள் ஒன்று கூடி நின்றனர். அப்படியான சூழ்நிலையில் மீன் வியாபாரம் செய்தனர் என்ற […]

Today Political Cartoons of Sri Lanka