பெயர்தான் பிள்ளையார்- ஆனால் உள்ளேயிருந்தது???

பிள்ளையார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது .

இதனையடுத்து உடனடியாக கடற்படை மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தீவக சிவில் சமூகத்தினரால் தகவல் வழங்கப்பட்டது . அதற்கமைய புங்குடுதீவு மடத்துவெளி சோதனைசாவடியில் மேற்படி வாகனம் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட நிலையில் இறைச்சி கைப்பற்றப்பட்டதோடு இரு நபர்களும் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Next Post

யாழில் பிள்ளைகள் இருந்தும் அநாதரவான தாயொருவர் தொடர்பில் பொலிஸார் எடுத்த நடவடிக்கை!!!

Sat Jun 19 , 2021
Post Views: 796 யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்கள் ஆக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பிள்ளைகள் தமது தாயாரை கைவிட்டு சென்ற நிலையில், அது தொடர்பில் அயல்வீட்டினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த யயோதிப தாயாரின் பிள்ளைகள் அவருடன் தங்காத நிலையில் இரவு வேளைகளில் விரக்தியில் கத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

Today Political Cartoons of Sri Lanka