பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? – இன்று விசேட கூட்டம்..!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வெளியாகின்ற பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே, எதிர்வரும் 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், கொழும்பு – தெமட்டகொட பகுதியில் கோவிட் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் கடுமையாக சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 2,361 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Next Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

Fri Jun 18 , 2021
Post Views: 394 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை அச்சுறுத்தி கப்பமாக பணம் பெறும் மோசடி நடவடிக்கை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தன.. அதற்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளுக்கமைய அவ்வாறான 50 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறான அழைப்புகள் பல சந்தர்ப்பத்தில் வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசி இலக்கங்களுக்கே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கப்பமாக பணம் பெறுவதற்காக […]

Today Political Cartoons of Sri Lanka