பாகிஸ்தான் அரசு வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது..!!

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்குவதற்கு முன்வந்திருந்தது.

எனினும், கோவிட் பெருந்தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன.

சீனா, அமெரிக்கா, இலங்கை போன்ற 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளது.

எனினும்இ இந்த அன்பளிப்புக்களை அநேகமான நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அன்பளிப்பினை பெற்றுக் கொள்வதற்கு முடியாமையையிட்டு வருந்துவதாக இலங்கைஇ கனடா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவித்துள்ளன.

கடந்த காலங்களில் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணும் நோக்கில் காலத்திற்கு காலம் மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Next Post

முகம் பளபளப்பாக மாறணுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

Sun Jun 13 , 2021
Post Views: 308 பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. முகம் பளபளப்பாக மாறணுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது….. முதலில் பப்பாளி பழத்தை வெட்டி நன்றாக கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- […]

Today Political Cartoons of Sri Lanka