மீண்டும் பயணத்தடை விதிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்கள்..!!

மூன்று நாட்களுக்கு நீக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை (23) இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) கூறினார்.

கோவிட் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அன்று அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த பயணக்கட்டுப்பாடு மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.

வருகின்ற பொசன் திருவிழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

Next Post

கொரோனா தொற்றினால் யாழில் மேலும் நால்வர் உயிரிழப்பு!!

Tue Jun 22 , 2021
Post Views: 668 யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று 44 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக […]

Today Political Cartoons of Sri Lanka