பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்த நபரின் மகன் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்த நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன்,இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார். 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் […]

நாடளாவிய ரீதியில் சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 50 பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். எனினும் கொரோனா தொற்றுநோயால் 11 தாய்மார்கள் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார் இந்த நிலையில் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு […]

வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தித் தாக்குவதாகவும் அதனால் குறித்த வீதியால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த வீதியை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதியோரத்தில் காணப்படும் […]

நாடு முழுவதிலும் இனியும் பயணத்தடை விதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என அவர் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை […]

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலை இலங்கை மதுவரித்திணைக்களம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர். இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை – தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவருக்கும் கொரோனா […]

Today Political Cartoons of Sri Lanka