கர்ப்பிணி மனைவிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட நிலைமை – கண்கலங்க வைத்த சம்பவம்…!!

மனைவியை கைகளில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் சேர்ந்த கணவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ஹினிதும பிரதேசத்தின் கொடிகந்த பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பற்றியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் நாடு முழுவதிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எஸ்.குமார என்ற இளைஞர் தனது மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் இருக்கும் சிசு இரண்டு நாட்களாக சலனமற்றிருந்த காரணத்தினால் ஐந்து மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலயில் அனுமதிக்குமாறு குடும்ப நல உத்தியோகத்தர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பிரதேசம் முழுவதிலும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் குமார தனது மனைவியை இவ்வாறு சுமந்து கொண்டு நடந்தே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணியான சாந்தனி தற்பொழுது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையில் இருந்தாலும் தனது மனைவியையும் பிள்ளையையும் காப்பாற்றுவதற்காக 22 கிலோ மீற்றர்கள் சீரற்ற காலநிலையில் அவர்களை சுமந்து சென்று வைத்தியசாலையில் சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவத்தினால் குமாரவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளது.

Next Post

தேவையற்று அழைக்காதீர்கள் - இராணுவத்தளபதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்...

Mon Jun 14 , 2021
Post Views: 395 அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை பிரதேச செயலாளர் அலுவலக அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக […]

Today Political Cartoons of Sri Lanka