இலங்கையில் கடந்த 10 நாட்களில் 531 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய தொற்றுநோய் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்திய தினசரி கொரோனா மரணங்களின் அறிக்கைகளுக்கு அமைவாக இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடந்த 10 நாட்களில் 229 பெண்களும், 302 ஆண்களும் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 30 […]

நாட்டின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையானதும் முன்யோசனையற்றதுமான தீர்மானங்களால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார். நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கும் வகையிலான பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது. அதேவேளை கொவிட் – 19 வைரஸ் தொற்றானது நாடுமுழுவதும் மிகவேகமாகப் பரவிவருகின்றது.

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. அதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த காரைநகரை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், மன்னாரை சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இருவருடைய சடலங்களும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ஷ சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். அவை வருமாறு, யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை நாளை 27 ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தையும் திறந்துவைக்கவுள்ளார். […]

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கடந்த நாட்கள் முடக்கப்பட்ட யாழ் நகரப் பகுதியான குருநகர், பாசையூர் பகுதிகள் அறிவிக்கப்பட்டது. இப் பகுதிகளுள் உட் செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி அற்ற நிலையில் சில இளைஞர்களும் முதியவர்களும் மாறி மாறி வெளித் திரிவதனை காணமுடிந்ததாக தெரிய வருகின்றது. இந்நிலையில் வெளிச்செல்லும் இப் பகுதியைச் சேர்ந்த மக்களால் சுகாதார பாதுகாப்பற்ற நிலையில் கொரோணா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அயலில் வசிக்கும் மக்கள் மற்றும் வீதிவழியே அவதானித்த […]

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என […]

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய போதும் மயங்கி விழுந்துள்ள நிலையில் பலரும் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய மகளை குத்தி கொலை செய்த சம்பவத்தில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார். அதுமட்டுமின்றி, Sutha Karunanantham படுகாயங்களுடன் வீட்டில் […]

Today Political Cartoons of Sri Lanka