எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் இன்று இடம்பெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொவிட் நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அவற்றை மக்களுக்கு […]

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். மாத்தறை உயன வத்த உயனவத்த வடக்கு யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு களுத்துறை புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று சிறுவனை தீண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உடனடியாக ராகம பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று ராமக பொலிஸார், பாம்பு மற்றும் அதன் குட்டிகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடுவில் – மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையில் ஈடுபடும் குடும்பஸ்தர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தடவைகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டு […]

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் திகதி முதல் மேலும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுற்றறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் இ வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸார் விசாரணைகளை […]

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic Surgery) வல்லுநர் இளஞ்செழிய […]

யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை – 10, தெல்லிப்பழை வைத்தியசாலை – 01, பருத்தித்துறை வைத்தியசாலை – 06, மானிப்பாய் வைத்தியசாலை – […]

Today Political Cartoons of Sri Lanka