கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று சிறுவனை தீண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உடனடியாக ராகம பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று ராமக பொலிஸார், பாம்பு மற்றும் அதன் குட்டிகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடுவில் – மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையில் ஈடுபடும் குடும்பஸ்தர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தடவைகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டு […]

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் திகதி முதல் மேலும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுற்றறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் இ வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸார் விசாரணைகளை […]

Today Political Cartoons of Sri Lanka