இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் எரிபொருட்களின் விலையேற்றம் மட்டத்தில் வைத்திருப்பதற்காகவும் , வெளிநாட்டு ஒதுக்கங்களின் நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலன்களை மேற்கொள்வதற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம்இ அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என குற்றம் சுமத்தியிருத்த ஜனாதிபதியில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனாவின் செயலாளர் சாகர காரியவசம்இ இந்த சங்கட […]

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வரும் 15ம் திகதியில் இருந்து பாதிக்கப்பட்ட 9983 மீனவ குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்குவதற்கு முன்வந்திருந்தது. எனினும், கோவிட் பெருந்தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன. சீனா, அமெரிக்கா, இலங்கை போன்ற 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளது. எனினும்இ இந்த அன்பளிப்புக்களை அநேகமான […]

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் இவ்வாறு சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர். இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுக்கு வரும் ஆபத்துக்களை உணராமல் […]

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தமை தொடர்பில் பல தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை செல்வாக்கு , வசதி படைத்தவர்கள் விடயத்தில் சுகாதார பிரிவினரும் கண்டுகொள்ளாத நிலைமை தொடர்பிலும் அன்றாடம் தமது வாழ்க்கை செலவுக்காக உழைப்பவர்களை விரட்டுவதாகவும் , கைது செய்வதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த சம்பவம் […]

கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்துஇ அரசாங்கம் வழங்கிய ஆலோசனைகளுக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகையினை வழங்காவிட்டால், அது பற்றிய முறைப்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய நீங்கள் உங்கள் முறைப்பாடுகளை 011 – 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதால் ஏற்பட்ட கால தாமதமும் மற்றும் மரண சான்றிதழ்கள் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் தாமதமாக வெளியிடப்படுகின்றன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், சில […]

அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையினால் பெரும் அவல நிலையில் உள்ளார்கள் குறித்த 49 குடும்பங்களைச் சேர்ந்ததவர்கள் இந்நாட்களில் தங்களது பசியை போக்குவதற்காக தங்களது உணவாக பப்பாசி காய்களை வேகவைத்து சாப்பிட்டு வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தினால் தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்திலிருந்து கொவிட் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட நிவாரணத் திட்டங்களின் […]

Today Political Cartoons of Sri Lanka