மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க தீர்மானம்..!!

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்குள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Next Post

மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுமி காதலன் கதைக்கவில்லையாம் - கொழும்பில் சம்பவம்..!!

Sat Jun 19 , 2021
Post Views: 729 தொலைபேசியில் கதைத்த காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து, உயிரை மாய்க்க முயன்ற 14 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களின் முன் பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்கள் நீடித்த காதல் உறவைஇ சில தினங்களின் முன் இளைஞன் துண்டித்துள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka