கொவிட் மரணம் தொடர்பாக வெளியிடும் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்..!!!

நாளாந்த கொவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய முறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த தினங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களும்இ அவை கொவிட் மரணங்களா என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அறிக்கை பிறிதொரு நாளில் வெளியிடப்பட்டு வந்தது.

இதில் சில குழப்பநிலை காணப்பட்டதால் இன்று முதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான புதிய மாற்றம் ஒன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இதுவரை காலங்களில் கொவிட் மரணங்களை உறுதிப்படுத்தும்போது, முன்பு போல, முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Next Post

தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி....

Mon Jun 14 , 2021
Post Views: 399 நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு சலுகையில் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள […]

Today Political Cartoons of Sri Lanka