கேகாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றில் குதித்தமையினால் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கன, பத்தம்பிட்டிய பகுதியை சேர்ந்த சதாசிவம் ஸ்ரீகுமாரி என்ற 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இல்லாமையினால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் போது அந்த பெண் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் அயலவர்களின் […]

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாம்ளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆரம்பத்தில் ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் இலங்கை உட்பட பங்களாதேஷ், […]

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த சங்கத்தில் தலைவர் மாலக்க விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு, மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் […]

யாழ்.ஏழாலை பகுதியில் குப்பைக்கு தீ மூட்டியபோது தீக்குள் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் குப்பிளான் தெற்கை சேர்ந்த திருமதி அ.சுதாகினி (வயது43) என்பரே உயிரிழந்துள்ளார். சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை வீட்டில் உள்ளோர் நித்திரையால் எழுவதற்கு எழுந்து வீட்டு காணியினை கூட்டி குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். அந்த தீயில் முக குப்புற விழுந்து கடும் தீக்காயங்களுக்கு […]

மல்லாகம் நீதிமன்றில் பதிவாளராக கடமையாற்றும் N.K.கஜரூபன் அவர்களின் செயற்பாடு அனைவரையும் நெகிழ வைத்ததோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அவர் பகிர்ந்த விடயம்யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்.பனிக்கன்குளம் பகுதியில் பையில் ஏதோ வைத்து , வழிமறித்து விற்க முயன்றாளொரு பெண்!“பாலைப்பழம்!”பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினேன்.மாஸ்க்கை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டு கேட்டேன்“என்ன விலை?”“ஒரு Bag நூறு ரூபா!”அருகில் வீதியோரமாக அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒரு பெரிய சட்டியிலிருந்த பாலைப் பழங்களை பைகளில் […]

திம்புலாகல பிரதேசத்திலுள்ள விகாரையின் மாத்தளை ஷாசரத்ன என்ற பௌத்த பிக்கு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் ஏ-9 வீதியில் அமர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நாட்டை திறக்குமாறு வலியுறுத்தி இவ்வாறு நடு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குவை அங்கிருந்து அனுப்பி வைப்பதற்கு தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீண்ட நேரம் முயற்சித்த போதிலும், அவர் அங்கிருந்து நகரவில்லை. அதனைத் தொடர்ந்து தம்புள்ளை மாநகரசபை மேயர் சம்பவ இடத்திற்கு வருகை […]

பாணந்துறை, கெஸெல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தின் உரிமையாளரான பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தலைமுடியையும் வெட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபரின் மனைவி மற்றும் மேலும் 2 பெண்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், பிரபல நடிகையின் மகள் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு தாக்குதல் மேற்கொண்ட பெண்கள் மூவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பயண […]

நாட்டில் மேலும் 479 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி,இன்றைய தினம் 2,259 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக […]

Today Political Cartoons of Sri Lanka